Thursday 29 January 2015

தியாகி சட்டநாதக் கரையாளர்:

’1936 ஆம் வருடம், நவம்பர் மாதம் ஒருநாள் பகல் பன்னிரண்டுமணி.

”உங்களுக்கு வயதென்ன?”

”இருபத்தாறு”

”ஜெயிலுக்குப் போவீர்களா?”

”போவேன்”

”கல்யாணம் ஆகிவிட்டதா?”

”இல்லை”

”ஆனால்?”

”ஆனாலும் போவேன்”

இக்கேள்விகள் திருச்சி சிறையில் 1941 ஆம் வருஷம் நம்பர் 1 கைதியாக இருக்கும் ஸ்ரீ.ராஜகோபாலாச்சாரியாரால்( ராஜாஜியால்) கரையாளரிடம் கேட்கப்பட்டன. இது எல். சட்டநாத கரையாளர் எழுதிய ’1941 திருச்சி சிறை‘ என்ற சுவாரசியமான சிறு நூல்இலுருந்து எடுக்கப்பட்டது. தியாகி சட்டநாதக் கரையாளர் யாதவகுலத்தைச் சேர்ந்தவர். யாதவர்களில் உள்ள ஒரு குடிப்பெயர்தான் கரையாளர் என்பது. 1909 அக்டோபர் 25 அன்று தென்காசியில் பிறந்தவர். செல்வந்தக்குடும்பத்தைச் சேர்ந்தவர். பி.ஏ,பி.ஏல் படித்தபின் வழக்கறிஞராக தொழில் செய்யாமல் காந்தியால் கவரப்பட்டு சுதந்திரப்போராட்டத்திற்குச் சென்றார்.

சுதந்திரத்துக்குப்பின்னர் தமிழ்நாடு மொழிவழிமாநிலமாக ஆனபோது செங்கோட்டை பகுதி கொல்லம் அரசின் கீழிருந்து தமிழ்நாட்டுடன் இணைவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டார். 1968ல் இவர் பெயரில் ஓர் கலைக்கல்லூரி [ தியாகி சட்டநாதக்கரையாளர் யாதவர் கல்லூரி கொடிக்குறிச்சி, தென்காசி] நிறுவப்பட்டது.

சங்கரன்கோயில் தொகுதியின் சட்டச்சபை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டிருந்தார். 29-5-1967ல் மரணமடைந்தார்.

கரையாளரின் நூற்றாண்டு நாளில் காங்கிரஸ் சார்பில் எதுவுமே செய்யப்பட்டதாக தெரியவில்லை. காங்கிரஸில் இருந்து அதிகாரபூர்வமாக ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை. தினமணி நாளிதழில் மட்டும் ஒரு கால்பக்க விளம்பரத்தைப் பார்த்தேன்.

ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டர் உரிமையாளர் பிச்சை கோனார்:

10 ஆயிரம் ரசிகர்களை ஒரே நேரத்தில் உள்ளே அடைக்குமளவு மிகப் பெரிய தியேட்டரான தங்கம் இப்போது படம் காட்டாமல் பாழடைந்து போய்க் கிடக்கிறது. 1952ம் ஆண்டு இந்த பழம்பெரும் தியேட்டர் தனது திரையோட்டத்தை பராசக்தி படம் மூலம் தொடங்கியது. இந்த தியேட்டரை உருவாக்கியவர் பிச்சைமுத்துக் கோனார் என்பவர். உலகின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமை படைத்த அமெரிக்காவின் பிளான்விடா தியேட்டரைப் போல மதுரையில் உருவாக்க நினைத்த அவர் தனது விருதுநகர் நண்பருடன் இணைந்து இந்த தங்கத்தை வார்த்தார். கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவில், 2563 இருக்கைகளுடன் தங்கம் உருவானது. முதல் படம் பராசக்தி. தினசரி 4 காட்சிகளாக ஆரம்பித்த இப்படம் 4 மாதங்கள் ஓடியதாம். அப்போதெல்லாம் டிக்கெட் கட்டணம் குறைச்சல்தான். அதாவது நாலரை அணாதானாம். அதிகபட்ச டிக்கெட் கட்டணமே இரண்டரை ரூபாய்தான். பெயர் மட்டுமல்லாது, டிக்கெட்டும் கூட தங்கம் மாதிரி பளபளவென இருக்குமாம். பராசக்தியைத் தொடர்ந்து பல படங்கள் அங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியுள்ளதாம். சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள் அந்தக்கால மதுரை பெருசுகள். இப்படிப்பட்ட அருமையான கலையரங்கைக் கொடுத்த பிச்சைமுத்துக் கோனார் மறைவுக்குப் பின்னர் தியேட்டர் யாருக்குச் சொந்தம் என்பதில் அவரது வாரிசுகளிடையே ஏற்பட்ட பிரச்சினையால் தியேட்டர் மூடப்பட்டு கோர்ட்டுக்கு வழக்கு சென்றது. 1993ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் தங்கம் தனது திரையோட்டத்தை முடித்துக் கொண்டது. கடைசியாக இங்கு திரையிடப்பட்ட படம் ஈஸ்வர். இத்தியேட்டர் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Sunday 25 January 2015

குடியரசு தினம் என்றால் என்ன? சுதந்திரத்துக்கும் குடியரசுக்கும் யாதவர்களின் பங்கீடு:

மன்னர் ஆட்சி காலம் என்பது முடியரசு எனப்படும். அதாவது மன்னர் என்ற பட்டம்  வம்சம் வம்சமாக மாறப்படும் . குடிமக்கள் சேர்ந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது குடியரசு. அப்படி இந்தியர்கள் தேர்தலில் ஓட்டு போட  உரிமை பெற்ற தினமே குடியரசு தினம்.

இந்திய சுதந்திரத்துக்கான போராட்டம் 1700களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்தபோதே தொடங்கிவிட்டது. 1700களில் ஆங்கிலேயர்களை தமிழகத்தில் எதிர்த்தவர்கள் வீரன் அழகு முத்து கோன், மருது பாண்டியர், வேலு நாச்சியார் போன்றோர் ஆவர். ஐயா வீரன் அழகு முத்து கோன் அவர்கள் ஆங்கிலேயனை எதிர்த்து உயிரை இழந்தது 1759ல். மருது பான்டியர்கள் 1800ல், வேலு நாச்சியார் 1790ல். இவர்கள் அனைவரும் சம காலத்தை சேர்ந்தவர்கள், ஆனால் இந்திய சுதந்திரத்துகாக ஆங்கிலேயனை எதிர்த்து விழுந்த முதல் பலி நம் ஐயாவுடையது.

அது போல் 1954ல் திரு. சட்டநாத கரையாளர் அவர்கள் செங்கோட்டை தொகுதியில் ஜெயித்ததன் மூலம் தமிழ் யாதவர்களின் முதல் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கபாடார். மேலும் இவர்தான் தமிழ் யாதவ சமுதாயத்தின் முதல் சுயேட்சை எம்.எல்.ஏ.

மேலும் பெருமாள்தேவன்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள துலுக்கங்குளம், சொக்கலிங்கபுரம், மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களில் முழுதும் யாதவர்கள் தான். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் ராணுவத்தில் பனிபுரிகின்றனர். முத்தையா கோனார், சுப்பையா கோனார், ராமசாமி கோனார் போன்றோர் முதல் மற்றும் இரன்டாம் உலக போர்களில் பங்கு பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும் ராக்கப்ப கோனார், முத்துராக்கப்ப கோனார் நேதாஜி. சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து உயிரை தியாகம் செய்துள்ளனர்

Tuesday 20 January 2015

தமிழ் யாதவர் ஆன்மீக வரலாறு-4

இருளப்ப கோனாரும் சூட்டுகோல் மாயான்டி சுவாமிகளும்:

சூட்டுகோல் மாயான்டி சுவாமிகள் மதுரை மாவட்டம் கட்டிகுளத்தை சேர்ந்தவர். இளமையிலேயே ஆன்மிக ஞானம் பெற்றவர். திருமனமாகி குழந்தைகள் பெற்ற பின்னர் ஆன்மிகத்தில் முழுதாக இறங்கினார். சூட்டுகோல் ராமலிங்க சுவாமிகளின் சீடர் ஆனார்.

இருளப்ப கோனார் மதுரையை சேர்ந்தவர். இவர் மதுரையை சேர்ந்த செல்வந்தரான கருப்பண கோனாரின் ஒரே வாரிசு. இவருக்கு 26 வயதுடன் ஆயுள் முடிந்து விடும் என ஆருடம் கூறபட்டதால் மிகுந்த பயத்துடன் வழ்க்கையை கழித்து கொன்டிருந்தார். அப்போது மாயான்டி சுவாமிகளின் அறிமுகம் கிடைத்து அவரின் வழிகாட்டுதலில் கருப்பனேந்தலில் ஒரு குடிலமைத்து சுவாமிகள் இருளப்ப கோனாருக்கு வரவிருந்த பினிகளை தன் உடம்பில் வாங்கி 48 நாட்கள் தாங்கி கொன்டார்.இதனை நேரில் கன்ட இருளப்ப கோனார் அன்று முதல் சுவாமிகளின் பக்தர் ஆகி சொத்துக்கள் அனைத்தையும் சுவாமிகளுக்காக செலவு செய்தார். பின்னர் சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த பின்னர் அவருக்கு திருப்பரங்குன்றம் அருகே கோயில் கட்டினார். இன்று அவரின் வாரிசுகள் அதை பாதுகாத்து வருகின்றனர். திரு. ராமலிங்க கோன் இப்போது டிரஸ்டியாக செயல்படுகிரார்.

தமிழ் யாதவர் ஆன்மீக வரலாறு-3

இடையச்சியும் அங்காள பரமேஷ்வரியும்:

ஏனாதி செங்கோட்டை, மானாமதுரை அருகில் இருக்கும் கிராமம். இங்கு ஏதோ காரனத்தினால் மன்னுக்குள் அங்காள பரமேஷ்வரியின் சிலை புதைந்து முகடு போல் ஆகியிருந்தது..எவர் ஒருவர் அந்த முகடை கடந்தாலும் விழுவது வாடிக்கையாகும். இடையச்சி ஒருவள் தினமும் பால் விற்க அந்த வழியைத் தான் பயன்படுத்துவாள்..ஒவ்வொரு நாளும் விழுந்து விடுவாள். ஒரு நாள் தன் ஊமை பெண் குழந்தையோடு பேச்சு திறமை வர வேன்டும் என ஒருவர் ராமேஷ்வரம் நோக்கி அந்த வழியாக சென்று கொன்டிருந்தார். அப்பொழுது அந்த முகடை இடையச்சி கடக்கையில் விழுந்து விடுகிறாள்..அப்பொழுது அந்த குழந்தை "அய்யோ, எல்லா பாலும் கொட்டிவிட்டதே" என பேசி விட்டது..இதனை பார்த்த அந்த குழந்தையின் தந்தைக்கு அந்த முகட்டில் ஏதோ சக்தி உள்ளது என உணர்ந்தார்..பின் அங்கு தோன்டி பார்க்கையில் அங்காள பரமேஷ்வரியின் சிலை இருப்பதை கன்டு ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி அங்கு கோயிலை நிறுவினார்

தமிழ் யாதவர் ஆன்மீக வரலாறு-2

எப்படி சுடலை மாட சாமி வழிபாடு நம் சமூகத்தால் கடைபிடிக்க பட்டது- வரலாறு:

சீவலப்பேரி கிராமத்தில் தான் சுடலை மாட சாமி கைலாசத்திலுருந்து மன்னுலகம் வந்த போது அவதரித்த இடம். மாசானம் என்னும் இடையர் அங்கு வாழ்ந்து வந்தார். அவரிடம் சுடலை மாட சாமி ஒரு நாள் தனக்கு பால் வழங்குமாறு மாறு வேடத்தில் வந்து கேட்டார்..ஆனால் அந்த சமயம் மாசானத்தின் ஆடுகளிடம் பால் முழுவதும் வற்றியிருந்தன. இதை சாமியிடம் தெரிவித்தார் மாசானம். ஆனால் சாமி விடாமல் கேட்டதால் பாலை கறக்க ஆரம்பித்தார். பாலும் வந்தது..இதன் பின் சாமி தன் சுயரூபத்தை காட்டி மாசனத்தின் நாக்கில் ஒரு சக்கரத்தை வரைந்து விட்டு, உனக்கு என்த பிரச்சனை வந்தாலும் நான் துனை நிற்பேன் என கூறி மறைந்தார். இதன் பின் மாசானம் யோகாசானத்தினை கற்று சிவனை வனங்க ஆரம்பித்தார். அவரை மக்கள் வள குரு சன்னாசி என வனங்க ஆரம்பித்தனர்..இன்றளவும் சுடலை மாட சாமிக்கு படைக்க படும் படையல் வள குரு சன்னாசி சாமிக்கும் படைக்க படுகிறது.

தமிழ் யாதவர் ஆன்மீக வரலாறு-1

ஸ்ரீ ரங்கம் அருகில் மேலூர் என ஒரு கிராமம் உள்ளது. இங்கு சிவந்தியான்டி கோணார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு நாள் மாடு மேய்க்கையில் அய்யனார் சாமி அவர் அருகில் மாறு வேடத்தில் வந்து தினமும் தனக்கு பால் வழங்குமாரு கேட்டுள்ளார். இதனை சிவந்தியான்டி கோணார் மறுக்கவே அய்யனார் சாமி ஒரே அடியில் சிவந்தியான்டி கோணாரை கொன்றுவிடுகிறார். சிவந்தியான்டி கோணாரின் மனைவியின் கனவில் அய்யனார் சாமி வந்து " உன் கணவன் என் நான் கேட்டதை மறுத்ததால் அவரை என்னுடன் வைத்து கொள்ள முடிவெடுத்துவ்ட்டேன், இனி உன் வம்சம் முழுவதும் எனக்கு கோயில் பனி செய்ய வேன்டும்" என்றார். இன்றளவும் சிவந்தியான்டி கோணார் சாமி சிலை மேலூர் கிராமத்தில் உள்ளது..அந்த அய்யனார் கோயிலுக்கு இன்றளவும் ஒரு கோணார் தான் பூசாரி.